அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

News image

வடக்கு ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தால் இடிந்து விழுந்த வீடுகள்

Updated On :29 ஆகஸ்ட் 2020, 10:49 am

ANI

வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண மற்றும் பிற பகுதிகளில் செவாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்சரிவில் இடிந்து விழுந்துள்ளது. 

இதில், பர்வான் மாகாணம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பில் பர்வானில் மட்டும் 110 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிக்கையில்,

வெள்ளத்தால் நாடு முழுவதும் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 250 க்கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பர்வான் மாகாணத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிள்ளனர். 

கோடை காலங்களில், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மழைப் பெய்வதால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.