ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கி இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் கூறிகையில்,
ஒடிசாவில் பார்கர், நுவாபாடா, ஜஜ்பூர், பலேஸ்வர் மற்றும் பத்ராக் ஆகிய இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கு முன் மயூர்பஞ்ச், கியோஞ்சர் மற்றும் சுந்தர்கர் ஆகிய இடங்களில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்கர் மற்றும் மயூர்பஞ்சில் பகுதியில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மேலாண்மை மீட்புப் படை மற்றும் தீயணைப்பு வீரர்களைச் சேர்ந்த 39 குழுக்கள் பணியில் உள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் இன்று வந்துள்ளனர் என கூறினார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


