சென்னை உயர்நீதிமன்றத்தில் செப். 7 முதல் நேரடி விசாரணை
சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும்

சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கின் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வகையான சேவைகள் முடக்கப்பட்டன.
கல்வி நிலையங்கள், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதைபோன்று, நீதிமன்றத்தில் நேரடி விசாரணையும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
பிறகு அரசு அளித்த தளர்வுகளின்படி வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 5 மாதங்களாக நீதிபதிகள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரித்து வந்தனர்.
இதனிடையே 6வது ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், கரோனா பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் வழக்குகளை நேரடியாக விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...