கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்’: தில்லி அமைச்சர்

விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக மத்திய அரசு ஏற்க வேண்டும் என தில்லி போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

News image
படம்: டிவிட்டர்-கைலாஷ் கெஹ்லாட்
Updated On :1 டிசம்பர் 2020, 10:29 am

ANI

விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக மத்திய அரசு ஏற்க வேண்டும் என தில்லி போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டம் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று தில்லி போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் விவசாயிகளை சந்தித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் கைலாஷ் பேசுகையில்,

“விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் மத்திய அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், அவை அனைத்தும் நியாயமானவை. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை உறுதி செய்யதற்காக தான் நேரில் வந்துள்ளேன்.” என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.