மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: அரசு அளித்த மதிய உணவை ஏற்காத விவசாயிகள்
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் அரசு கொடுத்த உணவை ஏற்காமல் தாங்கள் கொண்டு வந்த உணவையே விவசாயிகள் உண்டனர்.


மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் அரசு கொடுத்த உணவை ஏற்காமல் தாங்கள் கொண்டு வந்த உணவையே விவசாயிகள் உண்டனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே 32 விவசாய சங்கங்களுடன் செவ்வாய்க்கிழமை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களில் உள்ள நிறை குறைகள் குறித்து ஆய்வு செய்ய குழுஅமைக்க வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் விவசாயிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று விவசாயிகளுடனான அரசின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அரசு கொடுத்த உணவை ஏற்காமல் தாங்கள் கொண்டு வந்த உணவையே விவசாயிகள் உண்டனர்.

அரசு கொடுத்த உணவை ஏற்காமல் தாங்கள் கொண்டு வந்த உணவையே உண்ணும் விவசாயிகள்.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ஒருவர் கூறுகையில்,
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் அரசு கொடுத்த உணவையோ, தேநீரையோ நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் கொண்டு வந்த உணவையே உண்கிறோம் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...