நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

இந்திய காவல் பணி அதிகாரிகள் 7 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image

தமிழக அரசு

Updated On :15 டிசம்பர் 2020, 1:33 pm

DIN

இந்திய காவல் பணி அதிகாரிகள் 7 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

சென்னை அமலாக்கப் பிரிவின் மண்டல காவல்துறை தலைவராக(ஐ.ஜி.) செந்தாமரைக் கண்ணன், டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்) லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக (டிஜிபி) பிராஜ் கிஷோர் ரவி, சென்னை சைபர் கிரைம் பிரிவு -1ன் காவல் கண்காணிப்பாளராக சுதாகர் ஆகியோரை நியமித்துள்ளது.

மேலும், தமிழக காவல் தலைமையக மண்டல  தலைவராக(ஐ.ஜி.) ஜோஷி நிர்மல், சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவின் துணைத் தலைவராக(ஏ.டி.ஜி.பி) அமரேஷ் புஜாரி, ஊனமாஞ்சேரி காவல் அகாடமியின் துணைத் தலைவர்(ஏ.டி.ஜி.பி) மற்றும் இயக்குநராக டேவிட்சன் மற்றும் காவல்துறை செயலாக்கப் பிரிவின் கூடுதல் தலைவராக சந்தீப் மிட்டலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.