பிரான்ஸ் அதிபருக்கு கரோனா: விரைவில் குணமடைய மோடி வாழ்த்து

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், விரைவில் குணமடைய இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், விரைவில் குணமடைய இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரான் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட மேக்ரானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதனையடுத்து இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,

“எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரான் விரைவில் குணமடைந்து ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com