தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
Updated on
1 min read

தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 6 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

பால்வளத்துறை ஆணையர் வள்ளலார், தொழிலாளர்துறை ஆணையராகவும், தொழிலாளர்துறை ஆணையர் நந்தகோபால், பால்வளத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில திட்ட கூடுதல் இயக்குநராக அமிர்தா ஜோதியும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை செயலாளராக கற்பகத்தையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை இயக்குநராக கமல் கிஷோர் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com