

சங்ககிரி: சங்ககிரி நகர்ப்பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வியாழக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை கூட்டங்கள் நடைபெற்றது.
சங்ககிரி நகர்பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம், சிஎஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலய வளாகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரத்துடன் கூடிய குடில்கள் அமைக்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
புனித அந்தோனியர் ஆலயத்தின் பங்குத்தந்தை சகாயராஜ் திருப்பளி ஆராதனைகளில் கலந்து கொண்டு பக்தர்களை ஆசீர்வதித்தார்.
அதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்தும், கேக்வெட்டியும் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.