ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

‘காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானது’: தோமர்

காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிராக தான் செயல்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் விமர்சித்துள்ளார்.

News image
வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
Updated On :24 டிசம்பர் 2020, 11:25 am

ANI

காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு எதிராக தான் செயல்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து சில விவசாய சங்கத்தினர் மத்திய அமைச்சர் தோமரை வியாழக்கிழமை சந்தித்தனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் தோமர் பேசியதாவது,

வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாக்பாத்தைச் சேர்ந்த விவசாயிகள் என்னிடம் கடிதம் கொடுத்துள்ளனர். வேளாண் சட்டங்களில் எந்த திருத்தமும் செய்ய வேண்டியதில்லை என்று அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

மேலும், ராகுல் காந்தி இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கையெழுத்திட்ட கடிதத்தை அளித்தார். ஆனால் என்னிடம் விவசாயிகள் கூறியதாவது, கங்கிரஸ் கட்சியினர் யாரும் எங்கள் கையெழுத்தை வாங்க வரவில்லை என தெரிவித்தார்கள்.

ராகுல் காந்தி அவ்வளவு கவலைப்பட்டிருந்தால், அவர்களது ஆட்சியில் விவசாயிகளுக்கு ஏதேனும் நன்மை செய்யதிருக்க முடியும். காங்கிரஸ் எப்போதும் விவசாயிகளுக்கு எதிரானவர்கள். எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.