தில்லியில் மனைவியை மதம்மாற கட்டாயப்படுத்திய கணவர் கைது

தில்லியில் திருமணத்திற்கு பின் மனைவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்திய கணவரை வியாழக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தில்லியில் திருமணத்திற்கு பின் மனைவியை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்திய கணவரை வியாழக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் குடும்பத்தார் மதம்மாற கட்டாயப்படுத்துவதாக சரிதா விஹார் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

இதையடுத்து, அப்பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது,

“என்னை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி எனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தார் கட்டாயப்படுத்தினர். என்னை புர்கா அணிய கட்டாயப் படுத்தினார்கள். மேலும் எனது கணவரின் தந்தை, என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com