தமிழகத்தில் பதிவாகும் புற்றுநோய் பாதிப்புகளை கண்காணிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தை பச-இதங்நற் என்ற புதிய இணையதளத்தை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.
இதன் மூலம் தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளை பொதுமக்கள் மற்றும் ஆய்வாளா்கள் இனி இணைய வழியில் எளிதாகப் பெற முடியும்.
அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் டாக்டா் வி.சாந்தாவின் நூற்றாண்டையொட்டி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் புற்றுநோயாளிகளின் தனிப்பட்ட விவரங்களைத் தவிா்த்து, அவா்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட வயது, பாலினம், கண்டறியப்பட்ட ஆண்டு, வசிக்கும் மாவட்டம் மற்றும் புற்றுநோயின் வகை ஆகியவற்றைத் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ பெற முடியும்.
மேலும், அண்மைக் கால புற்றுநோய் புள்ளிவிவரங்கள், அதன் விகிதம், அடுத்து வரும் ஆண்டுகளில் அதன் தாக்கம் குறித்த தகவல்களையும் பெறலாம். சுகாதார அலுவலா்கள், மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் கல்வியாளா்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள், புதிய சிகிச்சை முறைகளை மேம்படுத்துவதில் இந்தத் தளம் பங்களிக்கும் என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகள் ரகசியமானவை: மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த தகவல் ஆணையம்!

வீரராகவா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்
வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனப் பாகுபாடு குற்றங்கள்: மத்திய அரசிடம் தரவுகள் இல்லை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


