பிரிட்டனிலிருந்து தெலங்கானா திரும்பிய 16 பேருக்கு கரோனா
பிரிட்டனிலிருந்து தெலங்கானாவிற்கு வந்த 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


பிரிட்டனிலிருந்து தெலங்கானாவிற்கு வந்த 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் அதிதீவிர கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு முதல் அந்நாட்டிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே, பிரிட்டனிலிருந்து வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு வெள்ளிக்கிழமை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று உறுதி செய்யப்பட்ட 7 பேருடன், மொத்தம் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை மரபணு கண்டறிய அனுப்பப்பட்டுள்ளதாக கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...