டிச.31-ல் ராஜ்காட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி
குஜராத் மாநிலம், ராஜ்காட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு டிச. 31-ஆம் தேதி, காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.










