

கர்நாடக அரசின் புதிய தலைமைச் செயலாளராக பி. ரவிக்குமார் (வயது 58) புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக அரசின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வந்த டி.எம். விஜயபாஸ்கரின் பதவிக் காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகின்றது.
இதையடுத்து, கர்நாடக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வந்த பி. ரவிக்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் பி. ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.