நிகழ்வாண்டில் ரூ. 1.56 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 27 வரை வருமான வரி செலுத்திய 1.33 கோடி பேருக்கு ரூ. 1.56 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை
வருமான வரித்துறை
Updated on
1 min read

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 27 வரை வருமான வரி செலுத்திய 1.33 கோடி பேருக்கு ரூ. 1.56 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் டிசம்பர் 27 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,56,624 கோடி தொகையை 1.33 கோடி கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.

அதில், 1,31,11,050 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 50,554 கோடியும் 2,03,334 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு ரூ. 1,06,069 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com