2024-க்குள் 100 புதிய விமான நிலையங்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்
2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில்...


புதுதில்லி: 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சனிக்கிழமை தனது 2-வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்டில் 2020-21 ஆம் ஆண்டுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு உதவியாக உதான் திட்டம் செயல்படும். 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மத்திய அரசின் உதான் திட்டத்திற்கு உதவும் வகையில் இந்த விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதேபோன்று மும்பை - அகமதாபாத், தில்லி - லக்னோ நகரங்களை இணைக்கும் தனியார் தேஜஸ் ரயில்களைப் போன்று மேலும் ப்ரீமியம் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...