சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது: தங்கம், வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.67.7 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றை சுங்கத்துறை

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 5:51 am

DIN


சென்னை விமான நிலையத்தில் ரூ.67.7 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விமானத்தில் பயணம் செய்து வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

அப்போது, பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில் அவரிடம் இருந்து ரூ .67.7 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் மற்றும்  ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாடு நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்த தங்கக்கட்டிகளை முறையாக வாங்கியது பற்றியோ அல்லது இறக்குமதி செய்ததற்கான ஆவணமோ அவரிடம் இல்லை. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் உயரதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.