அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2 ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் ரத்து

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2020, 3:16 pm

தர்மராஜ்


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில், ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், கடந்த 6 ஆம் தேதி அந்தந்த ஊராட்சிகளில் பதவியேற்றுக்கொண்டனர். துணைத் தலைவர் பதவிக்கு ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போட்டியிட்டனர். அதன்படி, மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல்  அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.  இதில், 118 ஊராட்சியில் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் துணைத் தலைவர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், பெரம்பலூர் ஒன்றியம், வடக்குமாதவி ஊராட்சியில் துணைத் தலைவர் தேர்தலில் 2 பேர் போட்டியிட்டனர். இங்குள்ள வார்டு உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டோம். கை தூக்கல் மூலம் தான் வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேர்தல் நடைபெறவில்லை. பின்னர், மாலையில் தேர்தல் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு மூலம் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வேப்பூர் ஒன்றியம், அந்தூர் ஊராட்சியில் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை. இதேபோல, ஆலத்தூர் ஒன்றியம் கொளப்பாடி ஊராட்சியில் தேர்தல் நடத்துவதற்கேற்ற வார்டு உறுப்பினர்கள் வருகை பெரும்பான்மையின்மையால் தேர்தல் நடைபெறவில்லை.

இதனால், இந்த 2 ஊராட்சிகளிலும் துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கு, தேர்தல் ஆணையம் அறிவிக்கும் மற்றொரு தேதியில் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.