வாழப்பாடி அருகே காட்டு மாடு முட்டி விவசாயி பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, நெய்யமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடு முட்டியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாழப்பாடி அருகே காட்டு மாடு முட்டி விவசாயி பலி


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, நெய்யமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடு முட்டியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, கோதுமலை உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டெருமை, மான்கள், பல்வேறு இனக் குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இரை மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்து அதிகரித்து வருகிறது. கிராமத்திற்குள் புகும் வனவிலங்குகளை, வனத்துறையினரும் பொதுமக்களும், இணைந்து வனவிலங்குகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.ஆனால், இதுவரை வனவிலங்குகள் தாக்கியதில் மனிதர்கள் பாதிக்கப்பட்டதில்லை.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை, நெய்யமலை வனப்பகுதியில் இருந்து,  இடையபட்டியில் மலையடிவாரத்திலுள்ள முரால்காடு பகுதியில் காட்டு மாடு கூட்டம் புகுந்தது.  இதில் கன்றுக்குட்டியுடன் வந்த பெண் காட்டு மாடு, விவசாயி ராமலிங்கம்(53) என்பவரது மரவள்ளி  தோட்டத்தில் புகுந்தது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ராமலிங்கம், மரவள்ளி பயிர்களை சேதப்படுத்திய காட்டு மாட்டை, விரட்ட முயற்சித்துள்ளார்.

அப்போது, காட்டு மாடு விவசாயி ராமலிங்கங்கத்தை முட்டி தூக்கிவீசியது. இதில் குடல் சரிந்து படுகாயம் அடைந்த விவசாயியை மீட்ட அவரது குடும்பத்தினர்,  சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் காவலர்கள் மற்றும் வாழப்பாடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அருகே காட்டு மாடு தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com