எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி

நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :5 ஜூலை 2020, 4:08 am

DIN


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம்  ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் ஏடிஎம் மையம் கல்வி நிறுவன வளாகத்தில் வெளியே அமைந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று பேர் சேர்ந்த கொள்ளை கும்பல் வெல்டிங் எந்திரம் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை தகர்த்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியின் போது ஏடிஎம் எந்திரம் தீப்பற்றி எரிந்துள்ளன. 

Story image

ஏடிஎம் எந்திரத்தில் இருந்த ரூ 2.51 லட்சம் ரொக்கம் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு எந்திரம் தீ வைக்கப்பட்டதா அல்லது கொள்ளை முயற்சியில் ஏடிஎம் எந்திரம் தீப்பற்றி எரிந்தது போனதா என்பது குறித்து சம்பவ இடத்தில் நேரில் சென்று புதுச்சத்திரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 

சம்பவ இடத்தில் நாமக்கல் டிஎஸ்பி, காந்தி நேரில் விசாரணை நடத்தினார். முன்னதாக ஏடிஎம் எந்திரம் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.