சீர்காழி அருகே கார் விபத்தில் மருத்துவர் பலி
சீர்காழி அருகே கார் விபத்தில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.


சீர்காழி: சீர்காழி அருகே கார் விபத்தில் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிதம்பரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சி.சிவசேரன் (38). இவர் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தனது காரில் சிதம்பரம் சென்று கொண்டிருந்தார். மருத்துவர் சிவசேரனே காரினை ஒட்டி வந்துள்ளார். கார், சீர்காழி அருகே புத்தூர் அரசு கல்லுரி அருகே வந்துகொண்டிருந்த போது எதிரே மாடு குறுக்கே வந்ததால் காரினை திருப்ப முயன்றார். அப்போது கார் சாலையோர சிமெண்ட் கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த சிவசேரனை சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .b
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...