திமுக சார்பில் வீடு இல்லாமல் தவித்த திருநங்கைகளுக்கு நிதியுதவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திமுக சார்பில் வீடு இல்லாமல் தவித்த திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒரு லட்சம் நிதி வழங்கினார்கள்.
திமுக சார்பில் வீடு இல்லாமல் தவித்த திருநங்கைகளுக்கு நிதியுதவி
திமுக சார்பில் வீடு இல்லாமல் தவித்த திருநங்கைகளுக்கு நிதியுதவி

ஊத்தங்கரை அருகே வீடு இல்லாமல் தவித்த திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக திமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட சுன்னாளம்பட்டி பகுதியில் திருநங்கைகள் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் வீசிய கன மழையில் திருநங்கைகள் வசித்துவந்த வீடு சேதம் அடைந்தது, திருநங்கைகள் வீடு இன்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 2018 - 19 கீழ் மூன்று நபர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற திருநங்கைகள் வீடு கட்ட போதிய நிதி வசதி ஏதும் இல்லாமல் தவித்து வந்ததனர். 

அவர்களுக்கு ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் 2 லட்சம் நிதியும், திமுக ஊத்தங்கரை லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நிர்மலா கந்தசாமி தனது சொந்த நிதியில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை திருநங்கைகளுக்கு வழங்கினார். 

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் சாமிநாதன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் மருத்துவர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தினகரன், மிட்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவி சின்னதாய் கமலநாதன், கீழ்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி திருப்பதி, மரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பூமலர் ஜீவானந்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி,  மணிமொழி, கண்ணாமணி, சங்கர், பழனி, பிரகலநாதன், சின்னத்தம்பி, சின்னமுத்து தொழில்நுட்ப பிரிவு தொகுதி அமைப்பாளர் லயோலா ராஜசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காசோலை பெற்ற திருநங்கைகள் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com