மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தத்தில் கூடையில் வைத்து விட்டு சென்ற பிறந்து 3 மாதமே ஆன மாற்றுத்திறனாளி பெண் குழந்தை மீட்பு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை சேத்துப்பட்டி பேருந்து நிறுத்தத்தில், அருகில் யாருமில்லா நிலையில், கூடையில் குழந்தை ஒன்று இருப்பதாக துவரங்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் ஜெயதேவி தலைமையிலான காவலர்கள் குழந்தையை மீட்டெடுத்தனர்.
கூடையில் பிறந்து சுமார் 3 மாதமே ஆன மாற்றுத்திறனாளி பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. பார்வை குறைபாடு, கால்கள் முடம், மூளை வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றில் குழந்தை பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அதனையடுத்து திருச்சி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குழந்தைக்கு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த காவல் துறையினர், காவல்நிலையத்திற்கு வந்தடைந்த சைல்டு லைன் அமைப்பினரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
கடந்த 7-ஆம் தேதி துவரங்குறிச்சி காவல் நிலையம் அருகிலேயே 10 மாத பெண் குழந்தை முட்புதர்களில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே காவல் சரகத்தில் 3 மாத பெண் குழந்தை மீட்பு சம்பவம், தவறான பாதையில் செல்லும் ஜோடிகளின் மனிதாபிமானமற்ற செயலாக மீண்டும் மீண்டும் பதிவாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


