உலக அளவில் கரோனா பாதிப்பு 65,68,510; பலி 3,87,957
உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து,


ஜெனீவா: உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,815 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 65,68,510-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, நோய்த்தொற்றுக்கு 1,169 போ் பலியானதைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய் பாதிப்பால் பலியானவா்களின் எண்ணிக்கை 3,87,957-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,69,243 லட்சத்தை கடந்துள்ளது.
தொற்று பாதித்தோர் 29,57,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 54,200-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பாதிப்பு எண்ணிக்கையைப் பொருத்தவரை சா்வதேச அளவில் அமெரிக்காவில் 19,01,783 பேரும், பிரேசில் 584,562 பேரும் ரஷியாவில் 432,277 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பில் ரஷியா 3-ஆவது இடத்தில் இருந்தாலும், அங்கு கரோனா பலி விவரம் முழுமையாக வெளியிடப்படுவதில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...