காஞ்சிபுரத்தில் ஞாயிறு, புதன் ஆகிய இரு நாட்கள் மட்டுமே இறைச்சிக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல்களை மட்டும் விநியோகம் செய்யவும், நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் ஆகியன காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் செயல்படும். இதற்கு வியாபாரிகள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர். பொதுமுடக்கம் முழுவதுமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 36 நடமாடும் காய்கறிக்கடைகள், 13 மளிகைக்கடைகள், 8 பால் வண்டிகள் ஆகியன மூலம் மக்கள் பொருள் களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.