புதுச்சேரியில் 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கரோனா
புதுச்சேரியில் 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரி: புதுச்சேரியில் 8 மாத கர்ப்பிணி உள்பட புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் வியாழக்கிழமை வரை 271 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக காரைக்காலைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி உள்பட 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேருக்கு தொற்று எப்படி பரவியது என்பது தெரியவில்லை. மற்றவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், கர்ப்பிணி சென்னை சென்று திரும்பியவர் ஆவார்.
இதனிடையே 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 287 ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 162 ஆகவும் உயர்ந்துள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...