நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திய வீர‌ர்களின் தியாகம் வீணாக விடமாட்டோம்:  விமானப்படை தளபதி பதாரியா

நமது வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன் என்று ஆர்.கே.எஸ் பதாரியா கூறினார். 

News image
Updated On :20 ஜூன் 2020, 6:08 am

DIN


ஹைதராபாத்: எல்லையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்க விமானப்படை தயாராக உள்ளது என்று ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற  ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பின் போது விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதாரியா கூறினார். 

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் ஒரு ராணுவ தளபதி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனர். 

இந்த நிலையில் ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்து கொண்டு பேசிய இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா, அமைதியைக் காக்க நாடு எப்போதும் பாடுபடும் என்றும் கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் செய்த  "தியாகம்" வீணாகாது" என்று கூறினார். 

"மிகவும் சவாலான சூழ்நிலையில் நடந்த மகத்தான நடவடிக்கைகள், இந்தியாவின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளன. 

"இராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் மற்றும் அதன் விளைவாக உயிர் இழப்பு ஏற்பட்டபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத சீன நடவடிக்கை இருந்தபோதிலும், எல்லை பிரச்னை தற்போதைய நிலைமையை  அமைதியாக தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன." 

நிலைமையை நாங்கள் அறிவோம், "எல்லையில் ஏற்படும் எதிர்பாராத எந்தவொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க விமானப்படையும் தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. நமது வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன் என்று ஆர்.கே.எஸ் பதாரியா கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.