அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

செங்கல்பட்டிலிருந்து  வைகுந்தம் வந்த இருவருக்கு கரோனா

செங்கல்பட்டிலிருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்திற்கு வந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப

News image
Updated On :20 ஜூன் 2020, 4:32 am

DIN


சங்ககிரி: செங்கல்பட்டிலிருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்திற்கு வந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் அருகே உள்ளவெள்ளையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுள்ள இளைஞர் ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவரும் சென்னை, செங்கல்பட்டிலிருந்து வியாழக்கிழமை சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை செய்துள்ளனர். இருவருக்கும் தொற்று உறுதியானதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் சனிக்கிழமை சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.