சென்னையில் இருந்து சீர்காழி வந்தவர்களுக்கு கரோனா: 9 பேர் மீது வழக்கு பதிவு
பொய்யான தகவல் கூறி சென்னையில் இருந்து சீர்காழி வந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சீர்காழி: பொய்யான தகவல் கூறி சென்னையில் இருந்து சீர்காழி வந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீர்காழி அருகே கோதண்டபுரம் வெட்டாத் தங்கரை கிராமத்திற்கு கடந்த 12-ஆம் தேதி சென்னை தி.நகரில் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்த 9 பேர் ஒரே வாகனத்தில் புறப்பட்டு வந்தனர். அவர்களை நாகை மாவட்ட எல்லையில் கொள்ளிடம் சோதனை சாவடியில் காவலர்கள் மடக்கி சோதனை செய்தபோது தாங்கள் அனைவரும் விருத்தாசலம் திருமண நிகழ்வில் பங்கேற்று திரும்புவதாக பொய்யாக கூறியதையடுத்து, அவர்களை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தி கையில் சீல் வைத்து அனுப்பினர்.
கிராமதிற்கு சென்றவர்களை சென்னையிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்த ஊர் மக்கள் சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து 9 பேருக்கும் கரோனா பரிசோதனை எடுத்து விட்டு, முடிவு வரும் வரை வீட்டில் தனிமையாக இருக்குமாறு சொல்லி சென்றனர். பரிசோதனை முடிவில் 9 பேரில் 7 பேருக்கு 14 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மயிலாடுதுறை கரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர் .
இந்நிலையில் பொய்யான தகவல் கூறி நோய் தொற்று பரவ காரணமாக இருந்ததாக கூறி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேர் உள்பட 9 பேர் மீது புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பொய்யான தகவல் கூறி நோய் தொற்று பரவ காரணமாக உள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, ரிமாண்ட் செய்யபடுவார்கள் என நாகை எஸ்.பி செல்வநாகரத்தினம் எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...