விராலிமலை அருகே அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான மதுபானபாட்டில் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலிமலை ஒன்றியம் பூதகுடி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் 6709 என்ற எண் கொண்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முலம் நடத்தப்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல் மதுபான கடையை திங்கள்கிழமை இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கடையின் பணியாளர்கள் மற்றும் விராலிமலை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நிகழ்விடம் சென்ற காவல்துறையினர் மற்றும் கடையின் மேற்பார்வையாளர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 7.50 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் மார்ஷல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இக்கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் எப்போதும் ஆள்நடமாட்டம் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள இந்த கடையில் கொள்ளைச் சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்தும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் விராலிமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்காடு கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற நிலையில் தற்போது விராலிமலை அருகே உள்ள புதுப்பட்டியில் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பது டாஸ்மாக் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


