திருச்சி: திருச்சி மாநகரப் பகுதிகளில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்தவர்களை தங்க வைப்பதற்கான தனிமைப்படுத்தும் முகாம்களை பள்ளிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கரோனா முன்னெச்சரிக்கையாக சென்னையில் இருந்து வந்தவர்களை திருவரங்கம், கிழக்கு சித்திரை வீதியில் உள்ள மாநகராட்சிப் பகுதியில் தங்க வைப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பள்ளி முன்பாக ஒன்று கூடி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் கலைந்துபோகச் செய்தனர். பள்ளியில் தனிமை முகாம் அமைக்கப்போவதில்லை என கூறி அனுப்பினர்.
இந்தநிலையில், செந்தண்ணீர்புரத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சென்னை மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்களை தங்க வைப்பதற்கான தனிமை முகாம் அமைப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து செந்தண்ணீர்புரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேரந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தனிமை முகாம் அமைத்தால் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனிமை முகாம் அமைக்கக் கூடாது என கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பள்ளி வாயில் முன்பாக செவ்வாய்க்கிழமை 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப் பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


