விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எல்ஐசி முகவர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் எல்ஐசி முகவர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

News image
Updated On :23 ஜூன் 2020, 9:16 am

தஞ்சாவூரில் எல்ஐசி முகவர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் வடக்கு வாசல் ரோகினி தெருவைச் சேர்ந்தவர் வைரவன் (61). எல்ஐசி முகவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம், முதலியப்பட்டியில் உள்ள உறவினரைப் பார்ப்பதற்காக ஜூன் 12-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார். இவரது வீட்டின் பின்பக்கக் கதவு உடைந்து கிடப்பதாக வைரவனிடம் வீட்டுப் பணிப்பெண் திங்கள்கிழமை தகவல் அளித்தார். 

வீட்டுக்குத் திரும்பிய இவர் பின்பக்கக் கதவை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்திருப்பதையும், முன் பக்கக் கதவில் இருந்த பூட்டை உடைத்திருப்பதையும் கண்டார். மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், ரூ. 20,000  திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.