/

முதல்வர் நாளை சேலம் வருகை

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை சேலம் வருகிறார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:50 pm

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை சேலம் வருகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு புதன்கிழமை மாலை சேலம் வருகிறார். பின்னர் ஜூன் 25 ஆம் தேதி கோவை செல்கிறார். அங்கு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். 

கூட்டத்தை முடித்து விட்டு மீண்டும் சேலம் திரும்புகிறார். ஜூன்  26 ஆம் தேதி திருச்சி  செல்கிறார். அங்கு கரோனா தடுப்பு மற்றும் கடைமடை வரை காவிரி நீர்  செல்வதை உறுதிப்படுத்தும் வகையிலான குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தை முடித்து விட்டு மீண்டும் இரவு சேலம் திரும்புகிறார். 

ஜூன் 27 ஆம் தேதி சேலத்தில் முகாம் அலுவலகத்தில் அவர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜூன் 28 ஆம் தேதி சேலத்தில் இருந்து  பகல் 2 மணிக்கு புறப்பட்டு சென்னை திரும்பி செல்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.