ஈரோடு: காய்கறி இருப்பு இருந்ததால் காய்கறி மார்க்கெட்டில் இன்று மட்டும் விற்பனைக்கு அனுமதி 

ஈரோட்டில் கரோனாவை தடுக்கும் வகையில் ஈரோடு ஆர்கேவி சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட், கடந்த மார்ச் மாதம் 29 -ஆம் தேதி முதல் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில்  தற்காலிகமாக செயல்பட்டு வருக
ஈரோடு: காய்கறி இருப்பு இருந்ததால் காய்கறி மார்க்கெட்டில் இன்று மட்டும் விற்பனைக்கு அனுமதி 

ஈரோடு: ஈரோட்டில் கரோனாவை தடுக்கும் வகையில் ஈரோடு ஆர்கேவி சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட், கடந்த மார்ச் மாதம் 29 -ஆம் தேதி முதல் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில்  தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 200-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகளும் 50-க்கும் மேற்பட்ட பழ கடைகளும் உள்ளன. 

இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த காய்கறி மார்க்கெட்டில் வியாழக்கிழமை (ஜூன் 25) முதல் சில்லரை விற்பனைக்கு தடை விதித்து, காலை 7 மணி வரை மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும் எனவும், 27 -ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. 

இந்நிலையில், இந்த உத்தரவு நேற்று மதியத்திற்கு மேல் அறிவிக்கப்பட்டதால் அடுத்த நாள் வியாபாரத்திற்காக காய்கறிகளை வாங்கி இருப்பு வைத்தனர். இதனால் வியாபாரிகள் வியாழக்கிழமை ஒரு நாள் சில்லரை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம வலியுறுத்தினர்.

மக்களும் சில்லரை விற்பனையில் காய்கறிகளை மொத்த விலையில் வாங்க வியாழக்கிழமை அதிகாலை முதலே மார்க்கெட்டில் அதிகளவில் குவிந்தனர்.

இதைத்தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டில் வியாழக்கிழமை வழக்கம் போல் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் நடந்தது. ஆங்காங்கே மாநகராட்சி அதிகாரிகள் நின்று சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படியும், முகக் கவசத்தை முறையாக அணிந்து செல்லும் படி அறிவுரை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com