நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவர் எம்.சாம்பசிவம் தலைமை வகித்தார். வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மன்றச் செயலாளர் என். செல்வராஜ் வரவேற்றார். அதங்குடி, கூத்தாநல்லூர், சேகரை, லெட்சுமாங்குடி, தோட்டச்சேரி, கீழவாழாச்சேரி, மேல வாழாச்சேரி, பூந்தாழங்குடி , பாண்டுக்குடி, பண்டு தக்குடி , பனங்காட்டாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய, கூலித் தொழிலாளர்களுக்கு, அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் போன்ற ரூ. 1 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்களை, கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ஆர்.லதா வழங்கினார்.