விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன்களான வியாபாரிகள் காவலர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டதாக கூறி அதற்கு கண்டனம்

News image
Updated On :26 ஜூன் 2020, 6:12 am

DIN


கடலூர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன்களான வியாபாரிகள் காவலர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தந்தை மகன் இறப்பு தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையில் மாஜிஸ்திரேட், மருத்துவர் ஆகியோரையும் இணைக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.