வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து அந்த கடை மூடப்பட்டது.
பிராந்தியங்கரை அண்டகத்துறை பகுதியில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த உம்பளச்சேரி கிராம பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை திறக்க கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊராட்சி துணைத் தலைவர் லெட்சுமி தலைமையில் கிராமத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


