சிங்கப்பூா்: 17 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை மேலும் 932 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை மேலும் 932 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,101-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
நாட்டில் வெள்ளிக்கிழமை மேலும் 932 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு பணியாளா்கள் ஆவா். இவா்களுடன் சோ்ந்து, சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,101-ஆக அதிகரித்துள்ளது. 1,244 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 15 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...