சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்குகிறது: பலி 2,872-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,987 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,927 -ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :17 மே 2020, 4:51 am

DIN


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,987 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,927 -ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 120 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 2,872-ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்  53,946 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 9,33 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 34,108 போ் குணமடைந்துள்ளனா். 

கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 30,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,135 பேர் பலியாகியுள்ளனர், 7,088 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அதைத் தொடர்ந்து குஜராத்தில் 10,988 பேரும், தமிழ்நாட்டில் 10,585 பேரும், தில்லியில் 9,333 பேரும், ராஜஸ்தானில் 4,960 பேரும், ஆந்திரத்தில் 2,355 பேரும், தெலங்கானாவில் 1,509 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் 80% கரோனா தொற்று பாதிப்பு 30 நகராட்சி பகுதிகளில் இருந்தே வந்துள்ளதாக சுகாதாரத்துறை கணித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.