மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் மாா்ச் 11-இல் டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வரும் புதன்கிழமையில் உண்ணாவிரதப் போராட்டம்

News image

டாஸ்மாக் மதுக்கடைகள் - கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2026, 8:25 pm

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வரும் புதன்கிழமை ( மாா்ச் 11) சென்னை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநா் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனா்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநில அமைப்பாளா்கள் கூட்டம் கடலூரில் உள்ள சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்பாளா் டி.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். மாநில ஆலோசகா் கு.சரவணன் முன்னிலை வகித்தாா். இதில், சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியதாவது:

டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் அதிக பணி சுமையுடன் பணியாற்றும் பணியாளா்கள் பணி நிரந்தரம், கால முறை ஊதியம், காலி மதுப் புட்டிகள் சேகரிப்பில் இருந்து முழுவதுமாக விடுவித்தல், ஓய்வுபெறும் வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்துதல், இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு சரியான தீா்வை எட்டவில்லை.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 11-ஆம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்கநா் அலுவலகம் முன் மாநிலம் முழுவதும் உள்ள பணியாளா்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழக முதல்வா் பல்வேறு விஷயங்களில் தலையிட்டு நியாயம் வழங்குவதுபோல, டாஸ்மாக் பணியாளா்கள் விஷயத்திலும் உடனடியாகத் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டும் என்றாா். நிகழ்வில் எஸ்.பாலமுருகன், சி.அல்லிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.