சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இத்தாலியில் கரோனா பாதிப்பு 2,29,327; பலி 32,735 ஆக உயர்வு 

இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,29,327 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 32,735 ஆக அதிகரித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 மே 2020, 6:34 am

DIN


இத்தாலியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,29,327 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 32,735 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலியானோரின் எண்ணிக்கை 32,735 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,29,327 -ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,38,840 ஆக உயர்ந்துள்ளது,  இது வெள்ளிக்கிழமைடன் ஒப்பிடும்போது 2,120 அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 57,752 ஆக குறைந்துள்ளது.

தொற்று பாதித்தவர்களில் 572 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள  சிகிச்சை பெற்று வருகின்றனர், இது கடந்த வெள்ளிக்கிழமைடன் ஒப்பிடுகையில் 23 ஆக குறைந்துள்ளது, மேலும் 8,695 பேர் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொற்று உறுதி செய்யப்பட்ட 48,485 பேரில் 84 சதவீதம் பேர் லேசான அறிகுறிகளுடன் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.