எடப்பாடி நகரப்பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி?
எடப்பாடி நகராப்பகுதியில், மருத்துவர் உள்ளிட்ட இருவருக்கு, நேற்று கரானா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.


எடப்பாடி: எடப்பாடி நகராப்பகுதியில், மருத்துவர் உள்ளிட்ட இருவருக்கு, நேற்று கரானா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருமாள் கோவில் காலனி, இங்குள்ள நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே வசித்து வரும் 25 வயது மதிக்கத்தக்க கட்டிடத்தொழிலாளி , இவருக்கு கடந்த சில தினங்களாக, கடுமையான காய்ச்சல் மற்றும் சளித் தொல்லை இருந்து வந்தது.
இந்நிலையில் அவர், எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு கரானா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வாய்புள்ளதாக கூறி, அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோனை செய்யுமாறு அனுப்பிவைத்தார்.
இதையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்ற கட்டிடத்தொழிலாளியின், ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பபட்டது. பரிசோதனை முடிவில், கட்டிடத்தொழிலாளிக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பழைய எடப்பாடி, ஏரி ரோடு பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறைக்காக ஊர் திரும்பி அவருக்கு, ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் சோதனைச்சாவடி பகுதியில், கொரானா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் சம்மந்தப்பட்ட மருத்துவருக்கு கரானா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து, அவர் சேலம் தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கொரானா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள், வசித்த பகுதியில், எடப்பாடி நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், சுகாதரா ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் முகாமிட்டு நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவ அலுவலர் சண்முகவேல் தலைமையிலான மருத்துவக்குழு, நோய்த்தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா? என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...