சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,58,333; பலி 4,531 -ஆக உயர்வு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,531 போ் பலியாகிவிட்டனா்.

News image
Updated On :28 மே 2020, 4:14 am

DIN


நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,531 போ் பலியாகிவிட்டனா். வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 194 போ் பலியாகியுள்ளனர். நாட்டில் தொடர்ந்து 7வது நாளாக தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் ‘கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 67,692 போ் குணமடைந்தனா்.  86,110 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 194 பேர் பலியாகியுள்ளனர். 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 56,948 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்தில் 18,545 பேரும், குஜராத்தில் குஜராத் 15,195 பேரும், தில்லியில் 15,257 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.