சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 61 லட்சத்தை கடந்தது

உலக அளவில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியுள்ளது

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:43 pm

DIN

மேரிலாந்து: உலக அளவில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 61,60,443 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,38,305 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3,71,007 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,300 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்து உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இது பலியானோரின் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5,35,238 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 11,76,025 பேர்களில் 17,163 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.