கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக வீரப்பன் பெயரில் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News image
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
Updated On :27 ஜனவரி 2024, 5:48 pm

DIN

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக வீரப்பன் பெயரில் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் அனுப்பியது பெரும் சர்ச்சையானது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை நீக்க வேண்டும் என தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்தன.

தமிழக அரசும், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என பதில் அனுப்பி இருந்தது. 

இந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று வீரப்பன் என்ற பெயரில் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 

மேலும் அந்த கடிதத்தில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வீரப்பன் என்ற பெயரில் வந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்து காவலர்கள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.