திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியிலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


திருப்பூர்: பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் சாலை மறியிலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு மாநில அரசு தடை விதித்ததைக் கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக அக்கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகு யாத்திரைக்கு அனுமதி வழங்கவும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதன் பிறகு அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்.
அப்போது அங்கிருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அந்த இளைஞர் கீழே இறங்கியது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், மாநில பொதுச்செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், கதிர்வேல், காடேஸ்வரா தங்கராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...