விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஓசூரில் இந்து மகாசபா நிர்வாகி வெட்டிக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்து மகாசபா மாநிலச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :22 நவம்பர் 2020, 5:06 am

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இந்து மகாசபா மாநிலச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஓசூர், அனுமந்த நகர் பகுதியில் வசிப்பவர் நாகராஜ்(45). இவர், இந்து மகாசபா என்ற அமைப்பின்  மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் தனது வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், நாகராஜை  சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஓசூர் காவல் துணைக் கண்காணிப்பாளா் முரளி, மேலூா் ஓசூர் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.