உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு அளித்த தளர்வையடுத்து பல மாநிலங்கள் படிப்படியாக கல்வி நிறுவனங்களை திறந்து வருகின்றனர்.
இருப்பினும், பள்ளிகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கரோனா தொற்று பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் நெறிமுறைகளின்படி, 50 சதவீத மாணவர்கள் வருகையுடன், ஒருநாள் விட்டு ஒருநாள் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்வி நிறுவனங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவது, கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்வது, மாணவர்கள் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளிவிட்டு அமர்வது போன்ற விதிமுறைகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் இயங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


