தேனியில் வாகன விபத்தில் உயிரிழந்தவர் மீது வழக்கு: உறவினர்கள் மறியல்
பெரியகுளம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் மீது காவல்துறை தவறாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பெரியகுளம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் மீது காவல்துறை தவறாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது கருத்தபாண்டி சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கருத்தப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறை கருத்த பாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கருத்த பாண்டியின் உடலை வாங்க வந்திருந்த அவரது உறவினர்கள் இந்த விபத்துக்கு காரணமானவர் கருத்தப்பாண்டி என காவல்துறை தவறாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பு தேனி - மதுரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த க.விலக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அளித்த வாக்குறுதியினை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...